காங்கேசன்துறை பொலிஸ் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பகுதியில் உள்ள பொலிஸ் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் 20 இலட்சம் ரூபா நிதிப்பங்களிப்பில், வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் அருண தென்னக்கோனின் தலைமையிலான கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் சரீர ஒத்துழைப்புடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன, வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் அருண தென்னக்கோன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் மற்றும் கடற்படையினர் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
மேலும், நீண்டகாலமாக தீர்க்கப்படாது இருந்த குடிநீர் பிரச்சினைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் அருண தென்னக்கோன் இன்றுடன் தனது சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 23 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
