வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தில் நீரேந்து பிரதேச பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம்(Photos)
வவுனியாவில் நீரேந்து பிரதேச பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்ட நிகழ்வு இன்றையதினம் வவுனியா பேராறு நீர்த்தேக்க பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுவீட்சத்தின் நோக்கு எனும் சிந்தனை ஊடாக 2025ம் ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கிலே தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நிறைவேற்றப்படுகின்ற வடமாகாணத்தில் நீரேந்து பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கான விசேட நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாகவே குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதியினை பாதுகாக்கும் நோக்கத்துடன், பேராறு நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க
அதிபர் தி.திரேஸ்குமார், அமைச்சின் இணைப்புச்செயலாளர் சங்கரலிங்கம் மற்றும்
உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam