இலங்கையில் மற்றுமொரு வரிசை யுகம் ஆரம்பம்
நிலவும் கடுமையான வெப்பநிலையில், நுவரெலியாவில் மக்கள் நீருக்காக வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட லவர்ஸ்லீப், விநாயகபுரம் மக்கள் கடந்த 21 நாட்களாக நீர் இன்றி பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நீர் தேடி அலையும் நிலை
நுவரெலியா மாநகர சபைக்கு அண்மித்த பகுதிகளில் இவ்வாறான நிலைமையை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் நுவரெலியா மாநகர சபை ஆணையாளருக்கு தெரிவித்திருந்த போதும் இதுவரை அதற்கான நடவடிக்கையில் எடுக்கவில்லை என இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பாடசாலை செல்லக்கூடிய மாணவர்கள் தமது பாடசாலை சீருடைய கழுவுவதற்கு கூட நீர் இன்றி பாடசாலைக்கு செல்லாமல் நீர் தேடி அலையும் ஒரு கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
