எவ்வித முன்னறிவிப்புமின்றி துண்டிக்கப்பட்ட மின்சாரம்: மொட்டு கட்சி உறுப்பினர் சீற்றம்
எவ்வித முன்னறிவிப்புமின்றி தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஜகத் குமார சுமித்ரா ஆரச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (07) அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,''பன்னிரண்டாயிரம் ரூபாய் மின் கட்டணம் மட்டுமே செலுத்தவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுமானால், சாதாரண மக்களின் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் முறையினை கற்பனை செய்து பார்க்க முடியும் என கூறியுள்ளார்.
மின்சக்தி அமைச்சரின் பதில்
இதற்கு, ''மின்சாரத்தை துண்டிப்பதன் மூலம் அரசாங்கம் அவமானமும், அசௌகரியமும் அடைகிறது. அங்கும் இங்குமாக மின்சாரத்தை துண்டிக்க அமைச்சர், அரசு, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள் சென்று கூறுவதாக மக்கள் நினைக்கின்றனர்.
மேலும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு இதை தொடர்ந்தும் செய்கிறது. ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு இதில் வேலை செய்ததா இல்லையா என்பது குறித்து மின்சார வாரியம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.” என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.





சன் டிவியில் 3 சீரியல்களின் சங்கமம் நடக்கப்போகிறது... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, ரசிகர்களுக்கு குட் நியூஸ் Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
