நாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது சேமிக்கப்பட்டுள்ள நீரின் அளவு 45% நெருங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளரும், நீர் முகாமைத்துவ பொறியியலாளருமான எச்.எம்.பி.எச்.எஸ்.டி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு தற்போது 33% அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீரின் அளவு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நிலவும் நீரின் அளவு தற்போது 20 சதவீதத்தை நெருங்கியுள்ளது.
இருப்பினும், தற்போது சிறுபோக பயிர்ச்செய்கைப் பருவம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விவசாய நடவடிக்கைகளுக்கு இது போதுமானதாக இருக்கும். மேலும், இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதிகளுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது.

விவசாய நடவடிக்கைகள்
அத்துடன், எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கைப் பருவத்திற்கான விவசாய நடவடிக்கைகள் தொடர்பான திட்டமிடுதல்கள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, பெரும்போக ஏனைய நீர்ப்பாசனத் திட்டங்களின் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து, நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு மற்றும் மழைவீழ்ச்சி பற்றிய முன்னறிவிப்புகளுக்கு அமைய திட்டமிடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
25 நாட்களில் இண்டஸ்ட்ரி ஹிட் வசூல் கொடுத்த பெத்லகேம் குடும்ப யூனிட், நம்பர் 1 மலையாள படம் Cineulagam