கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: நீரில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்
திருகோணமலை - கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் குளத்தின் கீழ் உள்ள நீரேந்து பிரதேசங்கள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன.
குறித்த குளத்தின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக குளத்தின் எட்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நீரில் மூழ்கியுள்ள பிரதேசங்களில் ஒன்றான கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, உப்பாறு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள நான்கு கிராமங்களில் தரைவழிப் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.
போக்குவரத்து இடர்பாடுகள்
மேலும், மயிலப்பன்சேனை, சோலைவெட்டுவான், தகர வெட்டுவான் முதலான கிராமங்களுக்கான தரைவழி போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிராம மக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதோடு தமது போக்குவரத்தினை தோணிகள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
