உலகை அதிரவைத்த நிகழ்வுகள்: 2023 மீதான ஒரு பார்வை
2023 ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களில் உலகை உலுக்கிய நிகழ்வுகளில் இயற்கை பேரிடர்கள் பெரும் இடத்தை பிடித்துள்ளன.
அந்த வகையில்,
ஜனவரி 15: நேபாளத்தில் உள்நாட்டு சேவைகளை வழங்கி வரும் எட்டி ஏர்லைன்ஸ் 691, என்ற விமானம் ஆற்றின் கரையில் மோதி விபத்திற்குள்ளானது.இந்த விபத்தில் 72 பேர் பலியானார்கள்.
பெப்ரவரி 5: தென்னாப்பிரிக்கா பகுதியில் 37 நாட்கள் மையம் கொண்ட மிக நீண்டக்கால தீவிரமான வெப்பமண்டல சூறாவளியான 'ஃப்ரெடி சூறாவளி" உருவாகியது. இந்த சூறாவளியால் 1,400ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
துருக்கி மற்றும் சிரியா
பெப்ரவரி 6: துருக்கி மற்றும் சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இரு நாடுகளைச் சேர்ந்த 50,000ற்கும் அதிகமானோர் பலியாகினர்.
அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
மார்ச் 17: உக்ரைன் ரஷ்ய போரின் போது போர்க்குற்றம் புரிந்ததாக, ரஷ்ய ஜனாதிபதி புடினை கைது செய்ய பிடியானை பிரப்பித்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.
ஏப்ரல் 15: கென்யா நாட்டில் மத போதகரின் கருத்துக்கு அமைய இயேசு கிறிஸ்துவை பார்க்க தீவிர உண்ணாவிரதம் இருந்து 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
மே 3: மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கும் - குக்கி இனி பழங்குடி சமூகத்தினற்குமிடையே வன்முறை வெடித்தது.
ஜூன் 2: ஒடிசாவில் 3 தொடருந்துகள் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 296 பேர் பலியாயினர்.
இந்தியா - கனடா விரிசல்
ஜூன் 18: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா - கனடா இடையே நல்லுறவில் விரிசல் ஏற்பட வழிவகுத்தது.
ஜூன் 18: டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த 5 பேர் உடல் சிதைந்து பலியானார்கள்.
ஜூலை 13: இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெரும் சீற்றத்துடன் பேரழிவை ஏற்படுத்தியது. இதில் 260 பேர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் 5: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 8: அமெரிக்காவின் ஹவாய் காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 97 பேர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் 11: திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் 12ஆம் வகுப்பு மாணவரும், அவரது தங்கையும் வீடு புகுந்து வெட்டப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 3 மாணவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட் 24: தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
செப்டம்பர் 4: கிரேக்கம், பல்காரியா, துருக்கி ஆகிய நாடுகளில் டேனியல் புயலால் உருவாகிய வெள்ளத்துக்கு பலர் பலியானார்கள்.
செப்டம்பர் 8: மொராக்கோவில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,960 பேர் பலியானார்கள்.
ஒக்டோபர் 4: சிக்கிம் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு வரலாறு காணாத அளவு கனமழை கொட்டிதீர்த்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர்.
ஒக்டோபர் 7 : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் ஆரம்பமானது. தற்போதுவரை நடந்துவரும் இப்போரில் இரு நாடுகளைச் சேர்ந்த 20,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
நவம்பர் 12 : உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்க தொழிலின் போது ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் 17 நாட்கள் சிக்கியிருந்தனர்.
டிசம்பர் 16: குவைத் மன்னர் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா உடல் நலக்குறைவால் காலமானார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |