களனி மற்றும் களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு: வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
நாட்டில் நிலவும் அதிக மழை வீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக களனி மற்றும் களுகங்கையின் நீர் மட்டம் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். பி. சி சுகீஸ்வர பண்டார(S.P. C sugeeshwara bandara) தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்த ஆறுகளின் நீர்மட்டம் முதல் முறையாக எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திடீர் வெள்ளப்பெருக்கு
குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்திற்குட்பட்ட களனி மற்றும் களுகங்கையின் மேல் பகுதிகளில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளம் குறித்து அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 100 மில்லிமீற்றருக்கும் (100mm) அதிகளவில் மழை தொடரும் பட்சத்திலேயே இந்தப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக இந்த பிரதேசங்களில் நீர் மட்டம் உயர்வதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
