மட்டக்களப்பில் மழை குளங்களின் நீர்மட்டமும் உயர்வு(Photos)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகின்றமையால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பெரும்போக வேளாண்மை அறுவடையிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்டத்தின் சிறிய மற்றும் பெரிய குளங்களின் நீர் மட்டங்களும் அதிகரித்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 32அடி 10அங்குலம், உறகாமம் குளத்தின் நீர்மட்டம் 14அடி 11அங்குலம், வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் 18அடி 9அங்குலம், கட்டு முறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 8அங்குலம், அக்குளத்தில் 2அங்குல மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றது.
கித்துள்வெவெ குளத்தின் நீர்மட்டம் 8அடி 5 அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 5அங்குலம், புணாணை அணைக்கட்டு 7அடி 9அங்குலமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் உன்னிச்சைப்
பகுதியில் 39 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 50மில்லி
மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரி பகுதியில் 116.7மில்லி மீற்றர்
மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.




குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan