வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 16 அடியாக உயர்வு
வவுனியா - பாவற்குளத்தின் நீர்மட்டம் 16 அடியாக உயர்வடைந்துள்ளது என மத்திய நீர்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் கே.இமாசலன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக உயர்வடைந்து வருகின்றது.
அந்தவகையில், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழான பாவற்குளம் 19.4 அடி நீர் கொள்ளளவைக் கொண்டுள்ள நிலையில் அதன் நீர்மட்டம் தற்போது 16 அடியாக உயர்வடைந்துள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் அதன் நீர்மட்டம் சடுதியாக உயர்வடையக் கூடிய நிலையே உள்ளது.
எனவே, அதன் கீழ் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். அத்துடன், முகத்தான் குளத்தின் நீர்மட்டம் 11 அடி 5 அங்குலமாகவும், மருதமடுக்குளம் 12 அடி 3 அங்குலமாகவும் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில்,இரு குளங்களினதும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் அதன் கீழ் பகுதிகளில்
இருக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
ஈரப்பெரியகுளம் 10 அடி 9 அங்குலமாகவும், இராசேந்திரகுளம் 11 அடியாகவும்
உயர்வடைந்துள்ளது. அருவி ஆறு 6 அங்குலம் நீர் பாய்ந்து வருவதாகவும் அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.
