நாட்டில் வெகுவாக குறைவடையும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம்
மத்திய மலைநாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் கொள்ளளவு 155 அடியாக இருந்ததுடன், 13ஆம் திகதி காலை வரை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 144.2 அடியாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் கொள்ளளவு 120 அடியாகக் காணப்பட்டதுடன், 13ஆம் திகதி காலை வரை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 85.9 அடியாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,கனியன் மின்நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பைப்லைனில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருவதால், கனியன் நீர் மின் நிலையத்தில் 75 மெகாவோட் மின் உற்பத்தி 5 நாட்களாகியும் இதுவரை உற்பத்தி செய்யப்படவில்லை எனவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri