அதிகரிக்கும் ஆறுகளின் நீர்மட்டம்
தற்போது பெய்து வரும் கனமழையால் பல ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பானந்துகம பிரதேசத்தில் இருந்து நில்வளா ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் சிறியளவான வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை மேலும் அதிகரித்து வருகிறது.
ஆற்று நீர் மட்டம்
தலகஹகொட பிரதேசத்தில் உள்ள நில்வளா ஆற்றின் நீர் மட்டம் அவதான மட்டத்தை எட்டுள்ளது. இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் கனமழை காரணமாக அதிகரித்து வருகிறது.
கிங் கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதுடன், பத்தேகம, தவலம பிரதேசங்களில் அவதான மட்டத்தை எட்டியுள்ளது. களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
