முன் அறிவித்தலின்றி தடை செய்யப்பட்ட நீர் விநியோகம்: மக்கள் விசனம்
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்டு வரும் மன்னார் பிரதேச மக்களுக்கான உள்ளக குடிநீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது.
எந்தவித முன் அறிவித்தலும் இன்றி இன்று(16) காலை முதல் நீர் தடைப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நீர் விநியோகம்
இதேவேளை, இப்பிரதேசத்தில் வழங்கப்பட்டு வரும் உள்ளக குடிநீர் விநியோகம் கடந்தகாலங்களில் எவ்வித தடைகளும் இன்றி 24 மணி நேரமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கையில்,
எரிபொருள் தட்டுப்பாடு
“எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே குறித்த நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. உரிய முறையில் எரிபொருள் வழங்கப்படவில்லை.
இந்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
தற்போது எமக்கு தேவையான எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே விரைவாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்டு வரும் மன்னார் பிரதேச பாவனையாளர்களுக்கான உள்ளக குடிநீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



