நீர் வெட்டு தொடர்பில் வெளியான தகவல்
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று எட்டரை மணித்தியாலங்கள் நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (16.07.2023) காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.
அவசர பராமரிப்பு பணிகள்
சபுகஸ்கந்த மின்சார உப நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் இன்று இடைநிறுத்தப்பட்டமையால் இந்த நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபையின் ஒரு பகுதிக்கு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

என்னது மயில் கர்ப்பமாக இல்லையா, சரவணன் எடுத்த முடிவு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படத்திற்காக நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
