காலி மாவட்டத்தில் நீர் விநியோகம் தடை
காலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை (27) காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை இடைநிறுத்த வேண்டியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அம்பலாங்கொட, பலபிட்டிய, பெந்தோட்டை, படபொல மற்றும் எல்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் எனவும், அந்த காலப்பகுதியில் ஹிக்கடுவ பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan