12 மணிநேர நீர்வெட்டு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
12 மணி நேர நீர்வெட்டு குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (07) 12 மணி நேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை
இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த உப மின் நிலையத்தால் விநியோகிக்கப்படும் குழாய்களில் நடைபெறும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (07) காலை 8:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலான காலப்பகுதியில், பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க / சீதுவை நகர சபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டுநாயக்க, மினுவாங்கொடை பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட ஒரு பகுதியிலும் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
