நீர் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு
நீர் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நீர் கட்டணம்
மேலும் கூறுகையில்,''மின்சாரக் கட்டண திருத்தத்துடன், நீர் கட்டணங்களும் திருத்தப்பட வேண்டும் என சில தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது குறித்து ஆராய்வதற்காக ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நீர் கட்டண திருத்தம் தொடர்பான அறிவியல் ரீதியான விடயங்களைக் கலந்துரையாடி, எதிர்காலத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும்.'' என பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணம்
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை(17) நள்ளிரவு 12:00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சார கட்டணம் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணம் சுமார் 20% குறைக்கப்பட வேண்டுமென்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு மின் கட்டணம் குறைக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam