நீர்க் கட்டணங்களில் மாற்றம்: அமைச்சரவை அங்கீகாரம்
நீர்க் கட்டணங்களை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி நீர்க் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டது.
இந்த கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கு கடந்த மாதம் 15ம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
மின்சாரக் கட்டணம்
மேலும், கடந்த மாதம் 16ம் திகதி முதல் மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டதற்கு இணங்க நீர்க் கட்டணங்களும் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுப் பாவனைக்கான நீர்க் கட்டணம் 7 வீதத்தினால் குறைக்கப்பட உள்ளது.
அசாஙக் மருத்துவமனைகளுக்கான நீர்க்கட்டணம் 4.5 வீதத்தினாலும், பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் என்பனவற்றுக்கான கட்டணம் 6.3 வீதத்தினாலும் குறைக்கப்பட உள்ளது.
நீர்க்கட்டணம்
பொதுவாக நீர்க்கட்டணம் 5.9 வீதமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் எப்பொழுது நீர்க் கட்டணங்கள் குறைக்கப்படும் என்பது குறித்த அதிகாரபூர்வ திகதி விபரங்கள் வெளியிடப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri