வெளிநாடுச் சென்று திரும்பிய மனைவி : தேடி வந்த கணவனின் கோரச் செயல்..
ஹட்டன் - வட்டவளை பகுதியில் கணவனொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்துள்ளார்.
இன்று(17/04/2026) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகொலை...
இதன்போது, 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரொருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட பெண், வெளிநாடு சென்றிருந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பிய அவர் கலஹா பகுதியில் உள்ள தன்னுடைய கணவரது வீட்டிற்குச் சென்று வசித்து வந்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வட்டவளை பகுதியில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டிற்கு வருகைத் தந்த குறித்தப் பெண் மீண்டும் தன்னுடைய கணவன் வீட்டிற்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, மனைவியை தேடி அவருடைய கணவன் வட்டவளைக்கு வருகைத் தந்து, மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
எனினும், மனைவிஅதற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக, நேற்று பிற்பகல் முதல் இருவருக்கும் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், இன்று காலை குறித்தப் பெண் தனது கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல் - திபாகரன்


