சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான கழிவுத் தேயிலை கொள்கலன் ஒன்று பறிமுதல்
சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான கழிவுத் தேயிலையைக் கொண்ட 40 அடி கொள்கலன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் சுங்க துணை இயக்குநர் மற்றும் ஊடக செய்தித் தொடர்பாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வழியாக ஈராக்கிற்கு அனுப்பப்பட்டபோது இந்த கொள்கலன் திரும்ப அழைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோதனையின்போது, சுங்க அதிகாரிகள் 67 ஆயிரத்து 495 கிலோ கழிவு தேயிலை உறைகளில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கழிவுத் தேயிலையை மிளகாய்த் தூள் மற்றும் அரிசி என சுங்கத்துறையினருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக்கழிவுத் தேயிலை ஏற்றுமதியாளர் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam