குளவி கொட்டுக்கு இலக்காகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி (Video)
வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குட்பட்ட போகஸ்வெவ மகா வித்தியாலய பாடசாலையில் குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் இன்று நடைபெற்ற (17.10.2022) காலை பிரார்த்தனையின் போது காற்றின் காரணமாக மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மீது தாக்கியுள்ளது.
வைத்தியசாலையில் பலர் அனுமதி
இதனால் பாதிப்படைந்த 12 மாணவர்கள் பதவியா பிரதேச வைத்தியசாலையிலும் , 8 ஆசிரியர்கள் 12 மாணவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும், 3 மாணவர்கள் மடுகந்த பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 5 மாணவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.





அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
