எதிர்கட்சியுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் அமெரிக்கா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரியை புச்சியம் வரை குறைப்பதற்கான பேச்சுவார்த்தையை எதிர்க்கட்சி நடத்தியுள்ளதாகவும், அது சாதகமாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நலன் குறித்து விசாரிக்க கொழும்பு வைத்தியசாலைக்கு சென்று வரும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு
“ஐக்கிய அமெரிக்காவில் உள்ள United States House of Representatives அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலுள்ள democratic கட்சி மற்றும் republican கட்சி பிரதிநிதிகளை சந்தித்து வரி குறைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அப்பேச்சுவார்த்தையில் ஜுலி சங் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர். எங்கள் நாட்டின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆடை தொழிற்துறையில் ஈடுபடும் பணியாளர்களுக்காக நாம் முன்வைத்த கோரிக்கை நிறைவேறும் என நம்புகிறோம்.
எமது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு எவ்வித அரசியல் கூட்டணியை அமைக்கவில்லை.மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்ற தவறியுள்ளது. விவசாயிகளுக்கு நெல்லுக்கான உரிய விலை கிடைக்கவில்லை.
மேலும் கரும்பு விவசாயிகள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டதாரிகள் 40,000 பேர் கைவிடப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு தொழில் வழங்கவில்லை.
இவ்வாறான பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் இல்லை.அரசாங்கத்திடமிருந்து இதற்கான எவ்வித பதிலும்” இல்லை என்றார்.
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan