அநுர அரசாங்கத்தில் தாஜுதீன் கொலையை மூடி மறைத்தவர்கள்..
தற்போதைய அரசாங்கத்தில் 2012ஆம் ஆண்டில் நடந்த வாசிம் தாஜுதீன் கொலையை மூடிமறைப்பதில் ஈடுபட்ட சிலர் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டினை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் முன்வைத்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மித்தெனியவில் தனது இரண்டு குழந்தைகளுடன் கொல்லப்பட்ட அனுர விதானகமகே அல்லது கஜ்ஜா, தாஜுதீன் கொலையில் தொடர்புபட்டிருந்தவர் என பொலிஸார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஈஸ்டர் ஞாயிறு படுகொலைகள்
அதனை தொடர்ந்து இவ்விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் சில கருத்து வெளியிட்டுள்ளார்.
"கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, ஈஸ்டர் ஞாயிறு படுகொலைகள் மற்றும் வாசிம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலைகளுக்கு காரணமானவர்களைக் கைது செய்வதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஏனையவர்களும் அதையே மீண்டும் கூறினர், ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
நம்பிக்கையில்லா பிரேரணை
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைத் தடுத்தார்.
எதிர்க்கட்சியினால் அரசாங்கம் தோற்கடிக்கப்படும் என்பதற்காக அவர் இதனைச் செய்யவில்லை, முழு நாடாளுமன்றக் குழுவும் அம்பலப்படுத்தப்படும் என்ற அச்சத்தினாலேயே அது தடுக்கப்பட்டது.
அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்ட பெக்கோ சமன், கஜ்ஜாவைக் கொல்ல உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது.
முன்னைய அரசாங்கங்களின் போது செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தவர்கள், பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸில் முக்கிய பதவிகளை வகிக்கும் வரை தேசிய மக்கள் கட்சியின் அரசியல் மூலோபாயத்திலிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
