தமிழக வீரர்களின் சுழலில் சிக்கிய நியூஸிலாந்து
நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர்களான வொசிங்டன் சுந்தர் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் இணைந்து நியூஸிலாந்து அணியின் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.
புனேயில் நடைபெற்று வரும் நியூஸிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இன்றைய (24.10.2024) முதல் ஆட்ட முடிவின்போது இந்திய அணி, ஒரு விக்கட் இழப்புக்கு 16 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இழக்கப்பட்ட விக்கட்டுக்குரியவர் அணியின் தலைவர் ரோஹித் சர்மா ஆவார். அவர் ஓட்டமெதுவும் பெறாமலேயே ஆட்டமிழந்தார்.
புனே ஆடுகளம்
முன்னதாக, நியூஸிலாந்து அணி தனது முதலாம் இன்னிங்ஸில் 259 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
டெவன் கொன்வே 76 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திர 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
புனே ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளமையால், தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வொசிங்டன் சுந்தர் ஆகியோர் நியூஸிலாந்தின் 10 விக்கட்டுக்கெளையும் வீழ்த்தினர். அதிலும் வொசிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
