மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் சம்பந்தப்பட்ட எதிர்க்கட்சி : அமைச்சர் வெளியிட்ட தகவல்
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நூல் வெளியிட்டு இலஞ்ச ஊழல் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும் என வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் இன்று (10.11.2025) உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
ஊழல்- மோசடி தொடர்பில் நுல் வெளியிட்டவர்கள் ஊழல்- மோசடி ஒழிப்பு தொடர்பில் வாய்கிழிய பேசுகின்றனர்.
எதிர்க்கட்சியின் ஒப்பாரி
இன்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் ஒப்பாரி வைக்கின்றனர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க எழும்பி நின்று கூச்சலிட்டார்.

அப்போது சபாநாயகர் உட்காருமாறு கோரிய போதும் அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உங்களை வெளியில் அனுப்ப வேண்டிவரும் என சபாநாயகர் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், நான் யாருடைய பெயரும் சொல்லவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய காரணமும் இல்லை.மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நூல் வெளியிட்டு சிலர் மாட்டிக் கொண்டிருப்பதாகவே தெரிவித்தேன்.
அதற்கு ஏன் அவருக்கு கோபம் வருகிறது என எனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.