அநீதி இழைத்துள்ள பிரித்தானியா! வசந்த கரன்னாகொட குற்றச்சாட்டு
உலகிலேயே மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிய நாடுதான் பிரித்தானியா.
எனினும்,எமக்கு எதிரான பிரித்தானியா தடை அநீதியானது என்று இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவால் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காலனித்துவ ஆட்சி
"பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின்போது இலங்கையில் ஊவ, வெல்லஸ்ஸ புரட்சியை ஒடுக்குவதற்காக மக்கள் கொலை செய்யப்பட்டனர்.
தமது செயல் தொடர்பில் பிரித்தானியா வெட்கப்பட வேண்டும். இந்தத் தடை தொடர்பில் அரசு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.
அத்துடன் நின்றுவிடாமல் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஏனெனில் போலிக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எமது நாட்டுக்கு எதிராகக் கூட தடை விதிக்கப்படக்கூடும்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |