ஈரானின் அடுத்த உச்சத் தலைவர்! அடுத்த 24 மணி நேரத்தில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு
ஈரானின் அடுத்த உச்சத் தலைவர் அடுத்த 24 மணி நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் அடுத்த உச்சத் தலைவரை தேர்வு செய்யும் அமைப்பில் உள்ள ஒருவர் அடுத்த 24 மணி நேரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என்ற “வலுவான நம்பிக்கை” இருப்பதாக தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஈரானின் உச்சத் தலைவர்
மேலும், ஈரானின் Assembly of Experts அமைப்பின் உறுப்பினரான Hossein Mozzafari, தேர்வு செயல்முறை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் ஊகக்கருத்துகளை பரப்பாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிஅமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து அவரது மகன் ஈரானின் உச்சத் தலைவராக பொறுப்பெடுப்பார் என்று எதிர்ப்பார்க்கபடுகின்றது.
இந்தநிலையில் ஈரானின் உச்சத் தலைவரை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையிட விரும்புவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்