வங்கிகளில் சேவைகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
வங்கிகளின் வாடிக்கையாளர்கள், வங்கிகளால் வழங்கப்பட்ட கடவுச்சொற்களை (OTP) யாருடனும் எந்த சூழ்நிலையிலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்கள் பல்வேறு நிதி மோசடிகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே நிதி மோசடி பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மோசடியான பரிவர்த்தனை குறித்து குறுஞ்செய்தி கிடைத்தால், வங்கி அல்லது நிதி நிறுவனத்தை விரைவில் அழைத்து, தொடர்புடைய அட்டை அல்லது கணக்கை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |