FIFA அமைப்பின் முடிவிற்கு இலங்கை கால்பந்து சம்மேளம் வரறே்பு
FIFA அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோவினால் முன்மொழியப்பட்ட FIFA முன்னோக்கு நிறுவன முன்முயற்சியைத் திரும்பப் பெறுவதற்கான முடிவை வரவேற்று, இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த முடிவு, FIFA-வின் உறுப்பு சங்கங்களுக்கு இடையிலான ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை உறுதி செய்வதில் கியானி இன்ஃபான்டினோ கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக FFSL தெரிவித்துள்ளது.
FIFA அமைப்பின் உறுப்பு சங்கங்கள்
FFSL தலைவர் ஜஸ்வர் உமர், இந்த முடிவு இன்ஃபான்டினோவின் உள்ளடக்கிய தலைமைத்துவ பாணியை பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உறுப்பு சங்கங்களின் கருத்துக்கள் மற்றும் கவலைகளுக்கு செவிசாய்க்கும் அவரது விருப்பத்தையும் இது எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

FIFA தனது உறுப்பு சங்கங்கள் மற்றும் முடிவெடுக்கும் அமைப்புகளுடன் தொடர்ந்தும் ஆலோசனைகளையும் கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கும் என FFSL நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் கூட்டு விவாதங்களின் ஊடாகவும், உலகளாவிய கால்பந்தின் சிறந்த நலன்களைக் கருத்திற்கொண்டும் உருவாக்கப்படும் எனவும் FFSL குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஆசியா முழுவதிலும் உள்ள பல உறுப்பு சங்கங்களில் கியானி இன்ஃபான்டினோவுக்கு கிடைத்துள்ள ஆதரவை வரவேற்பதாகவும், மக்களை ஒன்றிணைக்கவும், கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், உலகளாவிய கால்பந்து சமூகத்தில் ஒற்றுமையை மேம்படுத்தவும் கால்பந்தைப் பயன்படுத்துவதற்கான அவரது தொலைநோக்குப் பார்வைக்கு FFSL தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.