சிறுவர்கள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை
உலகளாவிய ரீதியில் உள்ள சிறுவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தி குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, உலகளாவிய ரீதியில் சிறுவர் நோய்த்தடுப்பு பாதுகாப்பு 2023 ஆம் ஆண்டு ஸ்தம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு தொற்றுநோய்க்கு முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, 2.7 மில்லியனுக்கும் அதிகளவான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு
இதனிடையே, 2022 ஆம் ஆண்டில் தடுப்பூசி செலுத்தப்படாத சிறுவர்களின் எண்ணிக்கை 13.9 மில்லியனாக காணப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டில் 14.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இதனால் அம்மை நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் அதேபோன்று, 31 நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படாத சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 75 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு இல்லை எனவும், தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri