சுகாதார வழிகாட்டல்களை மீறுவோருக்கு கடும் எச்சரிக்கை
கோவிட் சுகாதார வழிகாட்டல்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறும் நபர்களை கண்டறியும் நோக்கில் இன்று முதல் மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சுகாதார விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர். பொது இடங்களில் முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளி பேணாமை குறித்து கண்காணிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பொதுப் போக்குவரத்து சேவைகள், பொது இடங்கள் என்பனவற்றில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கிரமமான அடிப்படையில் கோவிட் பெருந்தொற்று நிலைமைகள் அதிகரித்துச் செல்வதனை அவதானிக்க முடிகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
