ஜனாதிபதி வேட்பாளர்களின் பதவிகளுக்கு காத்திருக்கும் சிக்கல்
எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் சட்டங்களை மீறினால், ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் அவர்களின் பதவிகளை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகள் மற்றும் தற்போதுள்ள அளவுகோல்களின் அடிப்படையில் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்.
அத்துடன் தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்கள்
எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் சட்டங்களை மீறினால், ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் அவர்களின் பதவிகளை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
