தமிழை புறக்கணித்த நிறுவனத்திற்கு மனோ கணேசன் எச்சரிக்கை
திருந்துங்கள் அல்லது போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள் என தமிழ் மொழியை புறக்கணிப்புச் செய்த நிறுவனத்திற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பட்டர் பக்கட்டில் தமிழ் மொழி புறக்கணிப்புச் செய்திருந்த விவகாரம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
மனோ கணேசன் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் இது தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
#நியுசிலாந்து தயாரிக்கும் #அங்கர் பால் பட்டர் பொருட்களை #இலங்கையில் விற்கும் #பொன்டெராலங்கா நிறுவனம் மும்மொழி கொள்கையை #சிங்களம், #ஆங்கிலம், #சீனம் என, #தமிழை மறந்து புரிந்துக்கொண்டுள்ளது. பொன்டெராவுக்கு முன்-அறிவித்தல்! திருந்துங்கள் அல்லது எங்கள் போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள்! pic.twitter.com/bYWT71MrMN
— Mano Ganesan (@ManoGanesan) June 5, 2021
நியூசிலாந்து தயாரிப்புக்களான பட்டர் மற்றும் பால் உற்பத்திகளை இலங்கையில் விற்பனை செய்யும் பொன்டெரா நிறுவனம் மும்மொழிக் கொள்கை என்பதனை பிழையாக புரிந்து கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மென்ட்ரின் மொழிகளை இலங்கையின் மூன்று மொழிகளாக பொன்டெரா நிறுவனம் தவறாக புரிந்துகொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பிழையை குறித்த நிறுவனம் திருத்திக் கொள்ள வேண்டும் அல்லது போராட்டங்களை அந்த நிறுவனம் எதிர்நோக்க நேரிடும் என மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri