விஜயின் கட்சியில் இருந்து நாமலுக்கு எச்சரிக்கை! எதிர்க்கட்சிகளை திணறடித்த அநுர
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் பயணத்திற்கு அண்மையில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த கட்சியில் இருந்து இதற்கு கடுமையான பதில் கொடுக்கப்பட்டுள்ளதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இலங்கையை குட்டிச்சுவராக்கிய ஒருக் குடும்பத்தின் கொடுங்கோல் ஆட்சியின் உறுப்பினர் ஒருவர், எமது தலைவரை பற்றி பேசுவதை வன்மையாக கண்டிப்பதாக என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழின படுகொலைக்கு காரணமானவர்கள், தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க துடிக்கும் ஒரு தலைவரை பற்றி பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, நாமல் ராஜபக்ச, விஜயின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு நாமலின் ஆதரவாளர்களுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது உள்ளிட்ட பல அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,