யாழில் நிலவிய நீண்டகால பிரச்சினை.. துப்பாக்கிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரியில் தொல்லை கொடுக்கும் குரங்குகளைக் கட்டுப்படுத்துவதற்காகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. துப்பாக்கிகளை வழங்கியுள்ளார்.
நீண்டகாலமாகக் குரங்குகளின் தொல்லையால் சாவகச்சேரி கமக்காரர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
10 இலட்சம் ஒதுக்கீடு
அவர்கள், குரங்குகளால் பயிர்கள் அழிவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அதற்கமைவாக சாவகச்சேரி பிரதேசத்தில் குரங்குகளைச் சுட்டுக் கலைப்பதற்காக இறப்பர் துப்பாக்கிகளை வாங்க 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட நிதியில் இருந்து 10 இலட்சம் ரூபாவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. ஒதுக்கீடு செய்திருந்தார்.
அதற்கமைய கிடைக்கப் பெற்ற நிதியில் இருந்து 20 கமக்காரர்களுக்குக் குரங்குகளைச் சுட்டுக் கலைப்பதற்காகத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.