கொழும்பில் வாகனம் ஓட்டும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
கொழும்பில் வேகமாக செல்லும் வாகனங்கள் மீது மோதுவதாக கூறி சாரதிகளிடம் கப்பம் பெறும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஊடகமொன்று இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
டவுன்ஹோல் மற்றும் அதனை சுற்றி வரும் பகுதிகளில் இந்த சம்பவம் இடம்பெற்று வருகின்றது. யாசகம் பெறும் பெண் வாகனத்தில் மோதுண்டு கீழே விழுந்துள்ளார்.
அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுள்ளதா என பார்ப்பதற்கு வாகனத்தின் சாரதி வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று பார்க்கும் போது அவருக்கு மிக சிறிய அளவிலான பாதிப்புகளே காணப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் திடீரென யாசகம் பெறும் மற்றுமொரு நபர் ஒருவர் வருகைத்தந்துள்ளார். அவர் அந்த பெண்ணுக்கு பணம் பெற்றுக் கொடுப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அந்த பெண் உணவு உட்கொள்வதற்கேனும் பணமில்லை எனவும் விபத்தினால் மேலும் சிரமமாகிவிட்டதென கூறி பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.
பின்னரே அந்த யாசகர்கள் திட்டமிட்டு இவ்வாறு வாகனங்களின் மீது பணம் கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 16 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
