நாட்டில் நிலவும் மோசமான காலநிலை: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை மேலும் தொடரும் என்பதால் கடற்றொழிலாளர்களை அவதானமாக செயற்படுமாறு தேசிய வளிமண்டல அவதானிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை அவதானிப்பு மையத்தினால் இன்று (21.05.2024) வெளியிடப்பட்ட அறிக்கயைிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பலத்த மழைவீழ்ச்சி
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ இற்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் காலி மற்றும்
மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ இற்கும் அதிகமான பலத்த
மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பலத்த காற்று
நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்](https://cdn.ibcstack.com/article/85ed7366-bf20-479a-8574-57dce86d32e1/24-667fada53d8dd-sm.webp)
Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ் Manithan
![கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/90ad5568-c5b9-42f6-b20d-a6b3c96c5821/24-667ec069781b9-sm.webp)
கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க Cineulagam
![என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது... இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி கோபம்](https://cdn.ibcstack.com/article/0a4642b3-8972-46a9-98f3-3f7ff29a7bee/24-667f93834f083-sm.webp)