எந்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் குண்டுகள் வெடிக்கலாமென எச்சரிக்கை
2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தற்கொலைதாரிகளுடன் பயங்கரவாத பயிற்சி பெற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நூற்றுக்கணக்கானோர் தற்போதும் சமூகத்திற்குள் சுதந்திரமாக இருப்பதால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விகாரைகள், கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் மீண்டுமொரு பயங்கரவாத குண்டுகள் வெடிக்கலாம் என ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக முஸ்லிம் அமைப்பினால் இலங்கை அரசாங்கத்திடம் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் ரூபா பணத்திற்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு ஆற்றிய உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,
