பேஸ்புக் பதிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை பொலிஸ் திணைக்களம் தமது அதிகார பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை கவனத்தில் கொண்டு, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் செயல்படுத்துவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்
எனவே, இலங்கை பொலிஸாரின் அதிகார பூர்வ முகநூல் பக்கத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள கண்ணியமான மொழியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவது கருத்து தெரிவிப்பவரின் குணத்தை மட்டுமே சேதப்படுத்தும் என்று சுட்டிக்காட்டிய பொலிஸ் திணைக்களம், எதிர்காலத்தில் அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |