காசா கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ளும்: இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை
காசா ( Gaza) மீது இன்னும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுமென இஸ்ரேல் எச்சரித்துள்ளமையானது மத்திய கிழக்கு நாடுகளை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
ஹமாஸ் அமைப்பு பணையக்கைதிகளை விடுவிக்காமையாலும், இஸ்ரேல் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களின் தீவிரத்தாலும் தமது நகர்வுகள் தற்போதைய நிலையை விட கடுமையாக இருக்கும் என இஸ்ரேல் கூறியுள்ளது.
காசா போரால் இஸ்ரேலின் உள்நாட்டு அரசியலில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஒக்டோபரில் தொடங்கிய போர்
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஒக்டோபரில் போர் தொடங்கியது முதல் தற்போது வரை காசாவின் மக்கள்தொகை 6 சதவிகிதம் குறைந்திருப்பதாகப் பாலஸ்தீன வட்டாரத்தின் மத்திய புள்ளிவிவரத்துறை கூறியுள்ளது.
குறைந்தது 45,500 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 100,000 பேர் காசா வட்டாரத்தை விட்டுப் பிற இடங்களுக்குத் தஞ்சம் நாடிச் சென்றிருப்பதாகவும் புள்ளிவிவரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
போர் நிலையால் அதிகரித்துள்ள உணவுப் பற்றாக்குறையால் பாலஸ்தீனர்கள் அவதியுறுவதாகவும், குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவைப்படும் போர்வைகள், ஆடைகள் முதலியவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |