அதிகரிக்கும் மழைவீழ்ச்சி! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அடுத்துவரும் 36 மணி நேரத்தில் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.