இலங்கையில் ஐந்தாவது கோவிட் அலை ஏற்படுமாயின் மீள்வது கடினம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெல்டா திரிபினால் ஏற்பட்டுள்ள கோவிட் அலையில், ஒருவரிடமிருந்து 8 பேருக்கு வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது தீவிரமாக பரவி வரும் நான்காவது கோவிட் அலையில் டெல்டா திரிபினால் ஒரு நபரிடமிருந்து 8 பேருக்கு வைரஸ் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
ஆரம்பகாலத்தில் இந்த கோவிட் வைரஸானது ஒருவரிடமிருந்து 2.5 நபர்களுக்கு பரவக்கூடியதாக இருந்தது. அதன் பின்னர் வந்த அல்பா திரிபானது ஒரு நபரிடமிருந்து 4.5 நபர்களுக்கு பரவக்கூடியதாக இருந்தது.
முதலாவது அலையில் மரணவீதம் 0 க்கும் குறைவாகக் காணப்பட்டது. எனினும், தற்போது மரண வீதமானது 4 – 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.இதனூடாக தற்போதைய கோவிட் பரவலின் வீரியத்தை எம்மால் ஊகித்துக்கொள்ள முடியுமானதாக இருக்கும்.
மேலும் பல திரிபுகளால் இலங்கையில் ஐந்தாவது அலையொன்று ஏற்படுமாயின் அதிலிருந்து நாம் மீளுவது என்பது மிக கடினமானது என்றும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
