யாழில் கைதான சட்டத்தரணிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் முறைகேடான விதத்தில் காணியை எழுதிய குற்றச்சாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி ஒருவர் நேற்றையதினம்(06.10.2025) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சட்டத்தரணி விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரது கடவுச் சீட்டு முடக்கப்பட்டதுடன் வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டு, 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட் பிணைகளுடன் குறித்த சட்டத்தரணி விடுவிக்கப்பட்டுள்ளார்.
காணிகளை முறையற்ற விதத்தில்
முன்னதாக, யாழ்.பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை முறையற்ற விதத்தில் எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த சட்டத்தரணியின் வீட்டிற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை பொலிஸார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து எவ்விதமான நீதிமன்ற கட்டளையும் இன்றி தேடுதல் நடத்தி அடாத்தாக நடந்து கொண்டதாகவும் , பொலிஸாரின் குறித்த செயல்களை கண்டித்து இன்றையதினம் செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணி மோசடி வழக்குகளில் சில சட்டத்தரணிகள் நேரடியாக தொடர்பு பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு தாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
