பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள வடக்கு மாகாண சட்டத்தரணிகள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவரின் இல்லத்தில் அவரை கைது செய்யும் முகதாவில் வீட்டிற்குள் நுழைந்து தேடுதல் நடத்தும் தோரணையில் அச்சுறுத்தலாக யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நடந்து கொண்டமையை கண்டித்து வட மாகாணத்தில் உள்ள சட்டத்தரணிகள் யாவரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பானது இன்றையதினம்( 07.10.2025) முன்னெடுக்கப்படவுள்ளது.
காணி மோசடி வழக்குகளில்
யாழ். பொம்மைவெளிப் பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அந்தக் காணியின் உறுதி முடிப்பை நிறைவேற்றிய சட்டத்தரணி நேற்றையதினம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
எனினும், காணி மோசடி வழக்குகளில் சட்டத்தரணிகள் சிலர் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்குத் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



