இன்றிரவு 11 மணி வரை அவதானமாக இருக்கவும்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (29) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, எச்சரிக்கை அறிவிப்பு (29) இன்றிரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதற்கமைய, மேற்கு, சபரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்குப் பொருந்தும்.

குறித்த பகுதிகளில் சில இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
எனவே மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு! காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam