கனடாவில் சிறுவர் பால் மா வகைகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் சிறுவர்களுக்காக விற்பனை செய்யப்படும் சில பால் மா வகைகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்காக சந்தையில் பெற்ப்பட்ட சில பால் மா பொதிகளில் நுண்ணுயிர்களின் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,சல்மன்லா வகை பக்டீரியாக்கள் மற்றும் க்ரோனோ பெக்டர் என்னும் நூண்ணுயிர்கள் என்பனவற்றினால் பால் மா வகைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடந்த பெப்ரவரி மாதம் 17ம் திகதி விடுக்கப்பட்ட எச்சரிக்கையின் அடிப்படையில் சந்தையிலிருந்து இந்த வகை பால் மா பொதிகள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் சில பபாலட மா இணைய வழியில் தவறுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்வரும் பால் மா வகைகளே இவ்வாறு சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டன
• 964-gram containers of Similac Advance Step 1 Milk-Based Iron-Fortified Infant Formula Powder.
• 964-gram containers of Similac Advance Step 2 Milk-Based Iron-Fortified and Calcium-Enriched Infant Formula Powder.
• 400-gram containers of Similac Alimentum Step 1 Hypoallergenic Infant Formula Powder
• 658-gram containers of Similac Advance Step 2 Milk-Based Iron-Fortified and Calcium-Enriched Infant Formula Powder.
இந்த வகை பால் மா பொதிகளை பயன்படுத்தியவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.