ஆபத்து தொடர்பில் பௌத்தர்களுக்கு வந்த எச்சரிக்கை செய்தி
பொய் தகவல்கள் ஆபத்தானவையாகும், அதனால் பௌத்த உலகம் பொய் தகவல்கள் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன எச்சரித்துள்ளார்.
தாய்லாந்தில் சூலோன்கோன் அரச கல்லூரி பல்லைக்கழகத்தில் நேற்றுமுன் தினம் (01.06.2023) இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதான பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இன்று சந்தித்து கொள்வது உலகில் பல மில்லியன் மக்களின் உயிரை கொள்ளை கொண்ட உலகளாவிய தொற்றுநோய்க்கு பின்னராகும்.
தொற்றுநோய்க்கு பின்னர் உலகம் பூராகவும் பொருளாதார நடவடிக்கைகளில் பாரிய மந்த நிலையை காணக்கூடியதாக இருந்தது. அதனால் உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மேலும் கீழே தள்ளப்பட்டனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |