சவுதி அரேபியாவில் தொடரும் பதற்றம் - அமெரிக்க மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சவுதி அரேபியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதையடுத்து, அமெரிக்க அரசு தனது குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹவுதி அமைப்பினர், விமான நிலையங்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
சவுதி அரேபியாவில் உள்ள பிரதான விமான நிலையங்களைப் பயன்படுத்துவதில் அமெரிக்க குடிமக்கள் "தீவிர எச்சரிக்கையுடன்" இருக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் தூதரக விவகாரப் பிரிவு(TravelGov) அறிவுறுத்தியுள்ளது.

ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் தம்மாத்தில் உள்ள கிங் ஃபஹ்த் சர்வதேச விமான நிலையம் ஆகியவைக் குறிவைத்து சவுதி அரேபியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க அரசு தனது குடிமக்களை பாதுகாக்க இதுபோன்ற அறிவிப்புக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan