சுவிஸ் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அமைதியான இலையுதிர் காலநிலைக்குப் பின்னர் இன்று சுவிட்சர்லாந்தில் புயல் வீசும் என்றும் கடுமையான காற்று மற்றும் பரவலான புயல் சேதம் ஏற்படக் கூடும் என்று எச்சரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குளிர் காலம் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் மழை மற்றும் பலத்த காற்று வீசும். தாழ்வான பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விமானப் போக்குவரத்தும் தற்காலிகமாக தடை
உயர்ந்த பகுதிகளில், சூறாவளி போன்று மணிக்கு 160 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் இருந்து மத்திய பீடபூமி வரை நாட்டின் பெரும் பகுதிகள் பாதிக்கப்படும்.

மத்திய அரசின் அறிக்கையின்படி, வீதி, தொடருந்து மற்றும் விமானப் போக்குவரத்தும் தற்காலிகமாக தடைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை இரவு வரை இது கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri