நானுஓயா பிரதேச மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் ஒன்று நேற்று(14) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாரிய போக்குவரத்து நெரிசலும் எரிபொருள் கசிவும் ஏற்பட்டது.
விபத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட இடத்தில் அருகில் உள்ள நீரோடையில் எரிபொருள் கலந்ததால் குறித்த நீரை பயன்படுத்தும் பிரதேச மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை
மேலும் குறித்த நீர் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சங்கமிக்கின்றது .இதனால் அப்பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
கொலன்னாவிலிருந்து ஹட்டன் வழியாக வெலிமடை நோக்கி பயணிக்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பௌசரில் 33ஆயிரம் லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் வெவ்வேறாக பிரித்து இருந்ததாகவும் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் கசிந்து வெளியேறி வீணாகியுள்ளதுடன் குறித்த பகுதியில் பரவியுள்ளது எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
